தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

தில்லியில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிப்பது குறித்து...

News image

மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்

Updated On :26 ஜூலை 2026, 3:42 pm IST

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை (ஜூலை 27) விசாரிக்கவுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, ஜூலை 20 ஆம் தேதியில் நாடாளுமன்றத்தை நோக்கியும் போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால், அவர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாணவர் அமைப்பினர் மீது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இரண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, நாளை (ஜூலை 27) விசாரிக்கவுள்ளது.

இதனிடையே, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படையினருக்கு அனுமதி அளித்தது யார்? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.

Summary

Supreme Court to hear pleas on alleged police excesses during student protest at Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.