FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம்

எ.வ. வேலு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி...

News image

எ.வ. வேலு - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 11:34 am IST

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, அவருக்கு எதிராக காவல்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக எ.வ.வேலுவுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, முறையாக ஆய்வு செய்யப்படாமல் லுக்-அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததாக தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, எ.வ. வேலுவை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.

தொடர்ந்து, லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Summary

Supreme Court dismisses Tamil Nadu government's appeal against E.V. Velu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.