செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டிலுள்ள புகழ்பெற்ற நவசக்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை தரிசனம் செய்தார்.
இந்த கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ”விக்டோரியா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து கோயிலான அருள்மிகு நவ சக்தி விநாயகர் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் செழிப்பை வழங்குமாறு கணேசனிடம் வேண்டினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செஷல்ஸ் இந்து கோயில் சங்கத்தினர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விக்டோரியா நகரின் குவின்சி வீதியில் பசுமை மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இக்கோயில், 1992-இல் செஷல்ஸ் ஹிந்து கோயில் சங்கத்தால் கட்டப்பட்டது.
இக்கோயில், அங்கு வாழும் இரண்டு சதவீத ஹிந்துக்களின் ஆன்மிக மையமாக உள்ளது. வண்ணமயமான சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கட்டடக்கலை பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி, சங்காபிஷேகம் போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Modi offers prayers at the Tamil Vinayagar Temple in Seychelles!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










