
2005இல் வெளியான ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஜித்தன்’ படத்தின் வெற்றி மூலம் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு மற்றைய படங்கள் எதுவும் பெரிதாக வசூலை குவிக்காத்தால் அவருக்கான மார்க்கெட் இழந்தார்.
கடைசியாக 2019இல் வெளியான ‘உங்கள் போடனும் சார்’ படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் பிக்பாஸ் 4இல் பங்கேற்று மீண்டும் சினிமாவில் வருவதற்கான ஆயுத்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ரூட் நம்பர் 17’ என தலைப்பிடப்படுள்ள இந்தப் படத்திற்கு மலையால இசையமைப்பாளர் ஔச்சேப்பன் இசையமைக்க, பிரசாந்த் பிரணவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஜீவா நாளை (டிச.25) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.
— JithanRamesh (@JithanRamesh) December 24, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...