பிரபல நடிகை ராதிகா ஆப்தே புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. துணிச்சலான நடிகையான ராதிகா சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார்.
மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர்.
இதையும் படிக்க: தொழிலதிபரை மணக்கும் பிரபல தொகுப்பாளினி?
இவர் நடித்த ஹிந்தி படமான ‘மோனிகா ஓ மை டார்லிங்’ நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில், ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.