
முடிவுகளை எடுக்க சரியான நேரம் என புத்தாண்டு குறித்து நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் வெளியான அவரது 'யசோதா' படத்திற்குக் கூட படுக்கையில் படுத்தப்படி டப்பிங் பேசிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். சமந்தா உடல்நலம் பெற பலரும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். சமந்தாவும் 'மீண்டு வருவேன்' என்று தன்னம்பிக்கையுடன் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, 'முன்னோக்கி செயல்படுவோம். நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துவோம். புதிய மற்றும் எளிய முடிவுகளை எடுக்க இது சரியான நேரம். நம் மீது அன்பாகவும் மென்மையாகவும் இருப்பவர்களுக்காக. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் சமந்தா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.