
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கௌதம் கார்த்திக் பெயருடன் சிம்புவின் பெயரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
உலகமெங்கும் இந்தத் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...