
துணிவு திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
இதையும் படிக்க | களைகட்டும் புத்தாண்டுக் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
நேற்று வெளியான அறிவிப்பில் படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அஜித் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடாமல், கேள்விக்குறியுடன் போஸ்டரை மட்டுமே படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். துணிவு திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.