
அல வைக்குந்தபுரமுலோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் தமன். பெரும்பாலான தெலுங்கு படங்களுக்கு அவர் தான் இசையமைப்பாளர். வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாகும் படங்களுக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்துக்கும் தமன் இசையமைக்கவிருக்கிறார். தெலுங்கில் இவரது இசையில் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதையும் படிக்க | துள்ளாத மனமும் துள்ளும் கிளைமேக்ஸை தத்ரூபமாக மறு உருவாக்கம் செய்த சிறுவர்கள் : வைரலாகும் விடியோ
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் எடை குறைந்து விட்டதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், தான் 135 கிலோ எடையிலிருந்து 101கிலோவுக்கு குறைந்துவிட்டதாக கூறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 35 கிலோ அவர் குறைந்திருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் தமன் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். அந்தப் படத்தில் அவர் டிரம்ஸ் கலைஞராக நடித்திருந்தார். பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்த தமன், மல்லி மல்லி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் இயக்குநர் ஷங்கர் தயாரித்த ஈரம்தான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.