
நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் எஃப்ஐஆர். இரண்டு வருடங்களாக தயாரிப்பிலிருந்த இந்தப் படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | 'மகான்' படத்திலிருந்து துருவ் பாடிய மிஸ்ஸிங் மீ பாடல் இதோ
இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், எஃப்ஐஆர் படத்தின் வியாபாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.
ஆம், இந்தப் படம் திரையரங்குகளைத் தவிர்த்து 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விஷ்ணு விஷால் என்ற நடிகரை நினைத்து மகிழ்கிறேன். மக்களின் அன்பே இறுதி தீர்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi
— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 8, 2022
Lots of speculations going on about #FIR business.
Yes,
We have done the biggest business (22cr,non theatrical alone) for #FIR even before release.
Im happy for the actor VV.
Audience's love is the final verdict.
Vishnu Vishal
THE PRODUCER
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...