விஜய்யின் 'பீஸ்ட்' புதிய போஸ்டர்: 'நண்பன்' படத்தை நினைவூட்டுகிறதா?

பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய்யின் 'பீஸ்ட்' புதிய போஸ்டர்: 'நண்பன்' படத்தை நினைவூட்டுகிறதா?
Updated on
1 min read


காதலர் தினத்தையொட்டி பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் நாளை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த போஸ்டர் நண்படன் திரைப்படத்தை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அரபிக் பாணியில் குத்து வகையை சேர்ந்த பாடலாக அரபிக் குத்து பாடல் உருவாகியுள்ளது. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருந்த அரபிக் குத்து பாடலுக்கான புரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பாடலின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் அரபிக் குத்து பாடலுக்கான புரோமோ வெளியான நிலையில், நாளை (பிப்.14) அந்த பாடல் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இருவரும் இடம்பெறும் வகையில் அரபிக் குத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடுவதைப் போன்ற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நண்பன் திரைப்படத்தில் இலியானாவுடன் விஜய் நடனமாடும் பெல்லி நடன வகைப் பாடலை இந்தப் பாடல் நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com