'விண்ணைத்தாண்டி வருவாயா' நடிகர் மரணம்: ரசிகர்கள் இரங்கல்

விண்ணைத்தாண்டி வருவாயா பட புகழ் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் மரணமடைந்தார்.  
'விண்ணைத்தாண்டி வருவாயா' நடிகர் மரணம்: ரசிகர்கள் இரங்கல்
Published on
Updated on
1 min read

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கோட்டயம் பிரதீப். இவர் இன்று (பிப்ரவரி 17) மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. 

இவருக்கு மாயா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது 40வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த பிரதீப் சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் விண்ணைத் தாண்டி வருவாயா, ராஜா  ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் உறவினராக நடித்திருந்தார். சிம்புவுடனான இவரது காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com