நடிகர் விஜய்யின் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் நடனம் ஆடி விடியோ பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் அட்லியும் அவரது மனைவி பிரியா, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்டோருடன் பீஸ்ட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த விடியோவை அட்லி மற்றும் ப்ரியா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த விடியோவில் அட்லி நன்றாக நடனமாடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அட்லி ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு 4வது முறையாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










