
பல்வேறு நாடுகளைச் சார்ந்த உலகின் முன்னணி வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் சதுரங்க விளையாட்டு போட்டி இணைய வழியாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரஞ்ஞானந்தா 8வது சுற்றில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு வயது 16. வெறும் 39 நகர்வுகளில் அவர் வெற்றிப் பெற்று கார்லசனுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து பிரஞ்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிக்க | ’பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே சாதனை
இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளம் வீரர் பிரஞ்ஞானந்தாவின் வெற்றியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றி தொடரட்டும் சகோதரரே என்று வாழ்த்தியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,
Elated to hear the success of the young champ #Praggnanandhaa
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 21, 2022
Keep going dear brother #chesschampion