
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இருப்பினும் ரசிகர்களைப் படம் கவர்ந்துள்ளதாக தெரிகிறது.
இந்தப் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பிரபலங்களும் இணைந்து பார்த்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஹுமா குரேஷி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்துள்ளார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வில்லன் கார்த்திகேயாவும் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | 'எங்களுடைய காதல்...' - மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசனின் காதலர்
இதன் ஒரு பகுதியாக ஹுமா குரேஷியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் வலிமை! வலிமை! என உற்சாகமாக சத்தம்போட்டனர். இந்த விடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இது வலிமையின் சக்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் இரு சக்கர வாகன பந்தயம் தொடர்பான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முதல் 3 நாட்கள் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.