
கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு 46 வயதே ஆவதால் ரசிகர்களால் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதையும் படிக்க | தனுஷ் பட டிரெய்லரை வெளியிடுவாரா சிம்பு ?
இந்த நிலையில் நடிகர் விஜய் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மலர் தூவியும் தீபாராதனை காட்டியும் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Actor #Vijay pays homage to late actor #PuneethRajkumar #ThalapathyVijay pic.twitter.com/eF7BUPizEN
— Aathiraa Anand (@AnandAathiraa) February 26, 2022