
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- 12 நாள்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்: பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சாதனை
இருப்பினும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வருவேன் எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசனும் வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகின்றனர்.
இருவரும் மும்பையில் ஒன்றாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.