
டான் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமன் சிலப் புகைப்படங்களை ஒருங்கிணைத்த விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் இசை பின்னணியில் ஒலிக்கிறது. இது சிவகார்த்திகேயன் படத்துக்காக தமன் அமைத்த இசை என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் கார்த்தி
மேலும் இந்தப் புகைப்படத்தில் ஜதி ரத்னாலு கதாநாயகன் நவீன் பொலிஷெட்டி இருக்கிறார். நட்பு ரீதியாக இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Last Night Was My First Night tat I laughed Sooooooo muchhhhhh lol
— thaman S (@MusicThaman) January 6, 2022
With this bunch of timing ⏱genius Humans on planet earth darlings @Siva_Kartikeyan @NaveenPolishety @anudeepfilm @manojdft @iamarunviswa #SK20 pic.twitter.com/TvyZk6UTlf