தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :6 ஜனவரி 2022, 12:18 pm

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. 

இதனையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வந்தார். ஆனால் இந்தப் படம் சில காரணங்களால் பாதியில் நின்றது. பின்னர் முத்தைய இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மீண்டும் துவங்கவிருக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க, ஏற்காடு சென்றிருப்பதாக தெரிகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.