
நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உடற்பயிற்சி கூடத்தில் தனது காலுக்கான பயற்சியை மேற்கொள்கிறார். அந்த பதிவில் தான் 360 கிலோ எடையை காலால் தூக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் பிளட் மணி என்ற படம் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க | சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் ஆபாச பதிவு? வலுக்கும் எதிர்ப்பு
குருதி ஆட்டம், யானை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியுடன் என ஒரு படம் என மிகவும் பரபரபரப்பாக இயங்கி வருகிறார். இதில் யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம், ஹாஸ்டல் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...