
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்த நடிகர் அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து சிறிய முதலீட்டில் உருவான படங்கள் பொங்கலுக்கு வெளியாகின.
இந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருந்த சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகன், மகளுடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ''கரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதால் ஆச்சரியா படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். எல்லோருக்கும் சங்கராந்தி நல்வாழ்த்துகள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடும் தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.