
வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி விமசகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் டைம் லூப் முறையில் அமைந்த இந்தப் படத்தின் காட்சிகள் படத்தை பெரிதும் சுவாரசியப்படுத்தியது.
இந்த நிலையில் பிரம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ பகிர்ந்துள்ளார். படம் வெளியான போது மக்கள் கருத்து கேட்கும் விடியோவில் பேசிய ரசிகர் ஒருவர் படத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதால் தனக்கு படம் பிடிக்கவில்லை என்றும் படத்தில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடியோவை பிரேம்ஜி நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' பட கியூட் பொண்ணு பாடல் விடியோ இதோ
வெங்கட் பிரபு தற்போது அசோக் செல்வன் நடிக்கும் மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக சம்யுக்தா மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர்.
@vp_offl pic.twitter.com/qnJymGAjR9
— PREMGI (@Premgiamaren) January 16, 2022