
நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தான் பிரியங்கா சோப்ரா முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஹிந்திப் படங்கள், ஆங்கில படங்கள் என கலக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், ''நான் துவக்கத்தில் தமிழன் என்ற தமிழ் படம், ஹிந்தியில் அண்டாஸ், மற்றும் தி ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
முதன்முறையாக நான் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றபோது உடை உடுத்துவதும், மேக்கப் போடுவதும் தான் நடிப்பு என்று நினைத்திருந்தேன். தமிழன் படத்தில் நடித்தபோது எனக்கு தமிழ் தெரியாததால் நடிப்பதற்கு மிகக் கடினமாக இருந்தது. யாராவது வசனங்களை சொல்ல நான் மனப்பாடம் செய்துகொண்டு பேசுவேன். அப்போது என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்ப்பேன்.
இதையும் படிக்க | இயக்குநர் லிங்குசாமி பட முதல் பார்வை போஸ்டர் வெளியானது
நடிகர் விஜய் என் திரையுலக வாழ்க்கையின் துவக்க காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். அவர் படப்பிடிப்புத் தளத்தில் தன்னடக்கத்துடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டால் திரும்பி செல்ல மாட்டார்.
அதனை நான் தற்போதுவரை கடைப்பிடிக்கிறேன். நான் எப்பொழுதாவது தான் காட்சிகள் படமாகும் இடைவேளையில் எனது அறைக்கு செல்வேன். மற்றபடி எப்பொழுதும் படப்பிடிப்புத்தளத்தில்தான் இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Priyanka Chopra shares about her working experience with Thalapathy Vijay #Beast @actorvijay pic.twitter.com/oAIg9qyi06
— Cinema Media (@cinemamedia7) January 14, 2022
Priyanka Chopra shares about her working experience with Thalapathy Vijay #Beast @actorvijay pic.twitter.com/oAIg9qyi06
— Cinema Media (@cinemamedia7) January 14, 2022