சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பிடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்துக்காக சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தில் 3 நாயகிகள்
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையைும் ஜெய் பீம் திரைப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.