
நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டு வருவதாக திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ''விக்ரம் படப்பிடிப்பிற்காக நடிகர் கமல்ஹாசன் வெற்றி திரையரங்கத்திற்கு வந்தது எங்களுக்கு பெருமையான தருணம். கடைசியாக 1979 ஆம் ஆண்டு கல்யாண ராமன் படத்தின் நூறாவது நாளின் போது கமல்ஹாசன் வந்திருந்தார். எங்கள் திரையரங்கை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இமானுடன் 7வது முறையாக இணையவிருக்கும் பிரபல இயக்குநர்: விடியோ மூலம் அறிவிப்பு
விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆடுகளம் நரேன், காளிதாஸ் ஜெயராமன் பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானாதல் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
It’s a great honour & a moment of pride that Padmashri Dr. @ikamalhaasan Ji happened to step in #Vettri premises today for #Vikram shooting. The last time he came here was for the 100days celebration of #KalyanaRaman in 1979.
— Rakesh Gowthaman (@VettriTheatres) January 24, 2022
Big thanks to @Dir_Lokesh bro for choosing us. @RKFI pic.twitter.com/EIVjr8BVSh