
'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | 'வலிமை' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி ?
இந்தப் படத்தையடுத்து கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 'பத்து தல' படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்' பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இணைந்துள்ளார். மாநாடு படத்தில் இவரது பணி விரைவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Excited to be part of @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar n @KalaiActor s #patthuthala an awesome script from @nameis_krishna , thank you @StudioGreen2 We will see a measured #STR in this @arrahman sir pic.twitter.com/D6KMdoh6WI
— Editor PraveenKl (@Cinemainmygenes) January 25, 2022