
நயன்தாராவின் மாயா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். தொடர்ந்து டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இறாவாக்காலம் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் பொருளாதார சிக்கல் காரணமாக இன்னும் அந்தப் படம் வெளியாகவில்லை.
இயக்குநர் அஸ்வின் சரவணன் தற்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையும் படிக்க | விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது

இந்த நிலையில் இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது படங்களில் எழுத்தாளராக பணிபுரியும் காவ்யா ராம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருண புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட அஸ்வின் சரவணன், பேப்பர் பேனாவில் துவங்கியது. தற்போது கவிதையாக நிறைவுபெற்றுள்ளது. என்னுடன் பயணித்ததற்கு காவ்யா ராம்குமாருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
It started with pen and paper. It has ended in poetry  Kaavya Ramkumar, thank you for riding out the storm with me every single time. Doing this with you, especially during the third wave, was an adventure by itself. pic.twitter.com/WWlGs3lrm7
â Ashwin Saravanan (@Ashwin_saravana) January 30, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







