
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் பத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இயக்குநர் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அருள் வின்சன்ட் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிக்க | சுந்தர்.சி படத்துக்காக இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்: இசையமைக்கும் யுவன்
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார்.
#FIRonFeb11 Gear up for the biggest hunt.⚡️⛓
— Red Giant Movies (@RedGiantMovies_) January 31, 2022
A @RedGiantMovies_ release.@Udhaystalin @itsmanuanand @TheVishnuVishal @menongautham @mohan_manjima @raizawilson @Reba_Monica @musicashwath @vvstudioz #RedGiantDistribution pic.twitter.com/G26RHAgW42