
கேஜிஎஃப் நடிகர் அவினாஷ் கார் விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னட நடிகரான பிஎஸ் அவினாஷ் கார் விபத்தில் சிக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் அவினாஷ் கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் இவர் கடந்த புதன்கிழமை காலை கார் விபத்தில் சிக்கிக்கொண்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ''காலை சரியாக 6.05 மணிக்கு நான் உடற்பயிற்சி கூடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன்.
இதையும் படிக்க | சிம்புவின் பத்து தல பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
அப்போது அனில் கும்ப்ளே சர்கிள் அருகே ஒரு லாரி சிகப்பு விளக்கை மீறி வேகமாக வந்து என் கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் எனக்கு காயம் ஏற்படவில்லை. கார் மட்டுமே சேதமடைந்தது. கடவுளுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.