''விஜய் சாரும் லோகேஷ் சாரும் இல்லனா, இது நடந்திருக்காது'' - அர்ஜுன் தாஸ் உருக்கம்

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 
''விஜய் சாரும் லோகேஷ் சாரும் இல்லனா, இது நடந்திருக்காது'' - அர்ஜுன் தாஸ் உருக்கம்

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 

கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தற்போது ஹிந்தி படமொன்றில் நாயகனாக நடித்துவருகிறார். மலையாளத்தில் விமர்சன ரீதியாக பெறும் வரவேற்பை பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். 

இந்தப் படத்தை கேடி என்கிற கருப்பு துரை பட இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.  இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், என்னுடைய முதல் ஹிந்தி படம். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இதனை எழுதும்போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன. 

முதலில் விஜய் சாருக்கும், இயக்குநர் லோகேஷுக்கும் பெரிய நன்றி. நான் இதனை முன்பே சொல்லியிருக்கிறேன். தற்போது மீண்டும் சொல்கிறேன். உங்கள் இருவருக்கும் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

பலருக்கு நான் ஏன் இருவருக்கும் நன்றி சொல்கிறேன் என ஆச்சரியமாக இருக்கும். காரணம் மாஸ்டர் படம் இல்லையென்றால் எனக்கு இந்த வேடம் கிடைத்திருக்காது. அதனால் லோகேஷ் சார், விஜய் சார் மற்றும் ஒட்டுமொத்த மாஸ்டர் படக்குழுவுக்கும் நன்றி. 

இந்தப் படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது முதலில் என்னுடைய பெற்றோர், இயக்குநர் லோகேஷ் சார் மற்றும் விஜய் சார் ஆகியோரிடம் தான் தெரிவித்தேன். 

என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி மதுமிதா மேம். இந்த வாய்ப்புக்காக விக்ரம் சாருக்கு நன்றி. உங்கள் நிறுவனத்துடன் பணிபுரிவது பெறுமை. கத்தி படம் முதல் எனக்கு ஆதரவளித்துவரும் பத்திரிக்கை நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் பர்வையாளர்களுக்கு நன்றி. நான் உங்கள் ஆசிர்வாதங்களுடன் இந்த அழகான பயணத்தை தொடர்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com