இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விக்ரம் வெற்றி - 'இந்தியன் 2' படத்தைக் கையிலெடுக்கும் உதயநிதி

இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்கும் முயற்சிகளில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 ஜூலை 2022, 7:59 am

DIN

இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்கும் முயற்சிகளில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் தயாரித்து நடித்த விக்ரம் 2 படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் வெளியிட்டார். விக்ரம் தனக்கு நல்ல லாபத்தைக் கொடுத்ததாக அந்தப் படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அவர் சொன்னபடி லைக்கா நிறுவனத்திடமும் இயக்குநர் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  தற்போது விக்ரம் படத்தின் வெற்றியும் இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்க உதவியுள்ளது. 

கிரேன் விபத்து போன்ற தடங்கல்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இந்தப் படத்தை முடிக்கும் முன்பே கமல்ஹாசன் விக்ரம் படத்திலும், ஷங்கர், ராம் சரண் படத்திலும் பணியாற்றத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கமல்ஹாசனுடன் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 படம் இருந்திருக்கும். ஆனால் விவேக் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.  மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்தது. இதன் காரணமாக அவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்பாரா என்பது சந்தேகமே. விவேக் மற்றும் காஜல் அகர்வாலின் இ காட்சிகள் வேறு நடிகர்களைக் கொண்டு புதிதாக படமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.