
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விடியோ போஸ்டர் வெளியாகி வரைலாகிவருகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்சன்ஸஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இந்தப் படத்தின் டீசர் வருகிற 7 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லைக்கா புரொடக்சன் பொன்னியின் செல்வன் பட விடியோ போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரஹ்மானின் மிரட்டான இசை பின்னணியில் ஒலிக்க வருகிறான் சோழன் என்று எழுதப்பட்ட கொடியுடன் கூடிய போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ''விஜய் சாரும் லோகேஷ் சாரும் இல்லனா, இது நடந்திருக்காது'' - அர்ஜுன் தாஸ் உருக்கம்
பொன்னியின் செல்வன் படத்துக்கு மணிரத்னம் மற்றும் குமரவேல் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். ஜெயமோகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் சிஜி பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவியாக த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
Look out! Brace yourself.
— Lyca Productions (@LycaProductions) July 2, 2022
Get ready for an adventure.
The Cholas are coming! #PS1 @madrastalkies_ #ManiRatnam pic.twitter.com/NW0DfLQzBi