இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி பாருங்க - ரஜினிகாந்த் வேண்டுகோள்

இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி படத்தைப் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி பாருங்க - ரஜினிகாந்த் வேண்டுகோள்

இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி படத்தைப் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் தி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் கட்டாயம் ராக்கெட்ரி படத்தைப் பார்க்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். 

அவரது பதிவில், ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். 

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். 

இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுக்களும். என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com