வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘குலு குலு’ திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘குலு குலு’ திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. 

‘மேயாத மான்’, ’ஆடை’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்தான் ‘குலு குலு’. இப்படத்தில் ஜியார்ஜ் மரியான், தீனா, நமீதா கிருஷ்ண மூர்த்தி, அதுல்யா சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். 

சர்கள் பாக்ஸ் நிருவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ மற்றும் பெயரிடப்படாத கன்னட படமொன்றும் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. 

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல் நடித்த ‘விக்ரம்’ படங்களுக்கு துணை திரைக்கதை ஆசிரியராக ரத்ன குமார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணையும் படத்திலும் ரத்ன குமார் இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் சந்தானம் இப்படத்தினைப் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

குலு குலு ஜூலை 29 முதல் திரையரங்கில் வெளியாகும். கலகலப்பான மகிழ்சியான திரைப்படத்திற்கு காத்திருங்கள். என்னுடைய படத்தில் இது ஒரு  புதுமையான முயற்சி. அனைவரையும் திரையரங்கில் சந்திப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.