'இரவின் நிழல்' மீதான விமர்சகரின் குற்றச்சாட்டு உண்மையா? என்ன சொல்கிறார் பார்த்திபன் ?

'இரவின் நிழல்' மீதான விமர்சகரின் குற்றச்சாட்டு உண்மையா? என்ன சொல்கிறார் பார்த்திபன் ?

இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்துவது பொய்யானது என சினிமா விமர்சகரின் கருத்துக்கு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். 

இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்துவது பொய்யானது என சினிமா விமர்சகரின் கருத்துக்கு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். 

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியிருந்தது.  கேமரா ஆன் செய்யப்பட்டதிலிருந்து ஆஃப் செய்யப்படும் வரை பதிவு செய்யப்படும் காட்சியை சிங்கிள் ஷாட் என்பர். 

 ஒரு கதை அடுத்தடுத்து ஒரே நேர்கோட்டில் விவரிக்கப்படாமல் முன்னும் பின்னும் மாறி மாறி விவரிக்கப்படும் முறையை நான் லீனியர் என்கின்றனர். சிங்கிள் ஷாட் முறையில் சில படங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும் இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் முறையில் எடுக்கப்பட்ட படமாகும். 

இரவின் நிழல் பட விளம்பரப்படுத்தும்போது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனின் இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று சொல்லப்படுகிறது. 

அதில் உண்மையில்லை. 2013 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய படமான பிஷ் அண்ட் கேட் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். உலக அளவில் பிரபலமான வெரைட்டி என்ற இதழ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அவருக்கு பதிலளித்துள்ள பார்த்திபன், ''விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான்  நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக லெவலில் ஒன்றென உருக,    நண்பர் ப்ளூ சட்டை மாறனின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க!

கூகுளில் அவர் சொல்லும் படம் ‘நான் லீனியர்’ என்ற வரிசையில் இல்லை. இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! சினிமா விமர்சகர் சைபால் சட்டர்ஜி உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் சிறப்பு காட்சி பார்க்க அழைத்தேன்.

அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என்று விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com