உங்களுக்கு பிடிச்ச இசையமைப்பாளர் யார் ? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபு தேவாவின் பதில்

உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரபு தேவாவின் பதிலை தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிரபு தேவாவின் நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் தொடர்பாக யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பிரபு தேவாவிடம் அவருக்கு பிடித்தமானவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரபு தேவா சற்றும் தயங்காமல் இளையராஜா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பெயர்களைச் சொன்னார். 

 பிரபு தேவாவின் நடனம் பெரிதாகப் பேசப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை ஏ.ஆர்.ரஹ்மான்  மற்றும் தேவாவின் இசையில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த விடியோ துணுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்த நாளை மறக்க முடியாது. பிரபு தேவா மாஸ்டர், உங்களை நான் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com