தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விஜய் படம் இல்லனா என்ன? அடுத்ததாக இரண்டு பெரிய நடிகர்களை இயக்கவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 ஜூலை 2022, 8:48 am

DIN

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அவர் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினார். 

ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு வரவேற்பு 

குறிப்பாக ஹிந்தியில் கஜினி படத்தை அமீர் கானை வைத்து ரீமேக் செய்தார். அந்தப் படம் ஹிந்தியில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்துக்கு பிறகு நடிகை அசின் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

துப்பாக்கி படத்தை ஹிந்தியில் தி ஹாலிடே என்ற பெயரில் இயக்கி வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஹிந்தி திரையுலகிலும் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. 

கைவிடப்பட்ட விஜய் படம் 

இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நாயகனாக நடிக்கவிருந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார். ஆனால் திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது. 

Story image

ஷாருக்கான் - சல்மான் கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் 

அடுத்ததாக அவர் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஷாருக்கான் - சல்மான் கான் இணைந்து நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறாராம். முருகதாஸ் சொன்ன கதை இரண்டு நாயகர்களுக்கும் பிடித்துவிட்டதாகவும் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் ஆமிர் கான் முக்கியமான வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.