பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

'விவாகரத்துக்கு பிறகு புது மனிதனாக உணர்கிறேன்' - மனம் திறந்து பேசிய நாக சைதன்யா

விவாகரத்துக்கு பிறகு புது மனிதனாக உணர்வதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

Published On :

விவாகரத்துக்கு பிறகு புது மனிதனாக உணர்வதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'தேங்க் யூ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மனம்' படத்துக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு நாக சைதன்யா பேட்டியளித்தார். 

அப்போது கரோனா ஊரடங்கு மற்றும் சமந்தாவுடன் விவாகரத்து உள்ளிட்ட காரணங்களால் மிகவும் கடினமாக இருந்ததாகவும் இந்தக் காலக்கட்டத்தில் தான் நிறைய மாறியுள்ளதாகவும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். 

பொதுவாக அதிகம் பேசாத அவர், தற்போது நிறைய பேசுகிறாராம். குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் நெருக்கமாக பழக முடிவதாகவும், ஒட்டுமொத்தமாக புதிய மனிதனாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

நாக சைதன்யா தற்போது ஆமீர்கானுடன் இணைந்து 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.