
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் யோகி பாபு விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து வந்தாலும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரோடக்ஷன்ஸ்’ மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஷான் இயக்குகிறார்.