
தனுஷின் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் வாத்தி. தெலுங்கில் இந்தப் படத்துக்கு சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார்.
சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 27 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் ஜூலை 28 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | இயக்குநர் விஜய் இயக்கும் புதிய இணையத் தொடர்
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் படங்களான வேலை இல்லா பட்டதாரி மற்றும் மாரி போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Get ready to welcome our @dhanushkraja in & as #Vaathi / #SIR
— Sithara Entertainments (@SitharaEnts) July 25, 2022
First Look on July 27 & Teaser on July 28! ✨#VaathiFirstLook #VaathiTeaser #SIRFirstLook #SIRTeaser @iamsamyuktha_ #VenkyAtluri @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya #SrikaraStudios pic.twitter.com/Fj3IQcnIOZ