13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் படம் பார்க்கிறேன்: அமித் ஷா

நடிகர் அக்‌ஷய் குமாரின் ‘ப்ரித்விராஜ்’  திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை  பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்ததாக கூறியுள்ளார். 
படம்: டிவிட்டர்| அக்‌ஷய் குமார்
படம்: டிவிட்டர்| அக்‌ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமாரின் ‘ப்ரித்விராஜ்’  திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை  பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்ததாக கூறியுள்ளார். 

சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பிரித்விராஜ்’ கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக 2017 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சிகில்லரும் நடித்துள்ளார்.  பிரமாண்டமான பொருள் செலவில் உருவான இத்திரைப்படம் ஜூன்-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்புக்காட்சி நேற்று(ஜூன் -1) திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தினைப் குடும்பத்துடன் பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது : 

ஒரு வரலாற்று மாணவனாக மட்டும் இப்படத்தினை பார்த்து மகிழ்ச்சி அடையவில்லை ஒரு இந்தியனாக இந்தியாவின் கலாச்சாரம் அதன் முக்கியத்துவத்தினையும் புரிந்து மகிழ்ச்சி அடைகிறேன். குடும்பத்துடன் சேர்ந்து சுமார் 13 அண்டுகளுக்கு பிறகு திரைப்படம் ஒன்றினைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படம் இடைக்கால இந்தியாவின் அரசியல் அதிகாரம் மற்றும் பெண்களின் சுதந்திரம் பற்றி பேசுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com