
சூரரைப் போற்று ஹிந்தி பதிப்பில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு கமலின் படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் படமான விக்ரம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களின் வரிசையில் விக்ரம் படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துவருகிறது.
இதையும் படிக்க | சிம்பு படத்துடன் மோதும் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'? வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்தப் படத்தில் ரோலெக்ஸாக சூர்யா வரும் காட்சியில் ரசிகர்களின் கரவொலியால் திரையரங்கம் அதிர்ந்தது. 10 நிமிடங்கள் வந்தாலுமே ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை சூர்யா ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சூரரைப் போற்று ஹிந்திப் பதிப்பு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்துவருகிறார். இந்தப் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். இதன் காரணமாக ரசிகர்களிடையே படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...