
தலைவர் 169 படத்துக்காக இயக்குநர் நெல்சன் வெறித்தனமாக வேலை செய்துவருவதாக ரெடின் கிங்ஸ்லே தெரிவித்தார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் விஜய் ரசிகர்கள் நெல்சனை விமர்சிக்கத் தொடங்கினர்.
முன்னதாக தலைவர் 169 படத்தை இயக்குவதிலிருந்து நெல்சன் நீக்கப்பட்டாத தகவல் பரவிய நிலையில், அதனை மறுக்கும் விதமாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 தோற்றத்திலிருக்கும் படத்தை பதிவேற்றினார். இதனால் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குவது உறுதியானது.
இதையும் படிக்க | 15வது ஆண்டில் சிவாஜி - ரஜினிகாந்த்தை மகளுடன் சந்தித்த ஷங்கர்
மேலும் தலைவர் 169 படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்சன் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ரெடின் கிங்க்ஸ்லே ஒரு பேட்டியில், நெல்சன் தற்போது தலைவர் 169 படத்தின் முதல் பாதியை எழுதிக்கொண்டிருக்கிறார். ஒரு வெறில இருக்காரு. கண்டிப்பா அடிச்சு தூக்குவாறு என்று தெரிவித்தார்.
@Nelsondilpkumar முழுக்க முழுக்க
தலைவர் 169 கதைல தான் இருக்காரு , அந்த.. வெறில இருக்காரு.. கண்டிப்பா அடிச்சு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...