'ரெண்டும் எப்படி சரியாகும்? யோசிச்சு பேசுங்க...'' - சாய் பல்லவிக்கு விஜயசாந்தி கடும் எச்சரிக்கை

'ரெண்டும் எப்படி சரியாகும்? யோசிச்சு பேசுங்க...'' - சாய் பல்லவிக்கு விஜயசாந்தி கடும் எச்சரிக்கை

நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

ராணா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த விராட பர்வம் என்ற படம் இன்று(ஜுன் 17) திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் நக்சல் இளைஞர் ஒருவர் மீது பெண் கொண்ட காதலை பேசுவதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படம் குறித்து பேட்டியளித்த சாய் பல்லவி, காஷ்மீர் பண்டிதர்கள் அந்த காலத்தில் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பேசுகிறது. மத முரண்களைப் பிரச்னையாக எடுத்துக்கொண்டால் சமீபத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றஇருந்த முஸ்லிம் வாகன ஓட்டி தாக்கப்பட்டு ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட கட்டயாப்படுத்தப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

சாய் பல்லவிக்கு எதிராக ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் அளித்துள்ள இந்தப் புகாரில், நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் களமிறங்கினர். நடிகையும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான திவ்யா, இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என எல்லா நல்ல மனிதர்களும் சொல்வதைத் தான் சாய் பல்லவியும் சொல்கிறார் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சாய் பல்லவியின் கருத்துக்கு நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டதும் ஒன்றல்ல. நீ சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை புரியும். ஒரு தாய் தன் மகனை தவறு செய்ததற்காக அடிப்பதும், ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா ?

இந்தப் பிரச்னை குறித்து முழுமையாக தெரியாவிட்டால் கருத்து சொல்லாமல் தள்ளியிருப்பதே சிறந்தது. பிரபலமானவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com