
தோழா பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய, 3 போலீசாருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனா இணைந்து நடித்த படம் தோழா. இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியான போது தூத்துக்குடியில் கார்த்தியின் ரசிகர் மன்றத்தினர் தோழா திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த சமயம் அவ்வழியே வந்த தூத்துக்குடி போலீசார், கார்த்தி ரசிகர் மன்றத்தினரிடம் போஸ்டர் ஒட்ட லஞ்சம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் லஞ்சம் தர மறுத்துள்ளனர்.
இதையும் படிக்க- தமிழக முதல்வர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜார்க்கண்ட் முதல்வர்
இதனால் ஆத்திரமுற்ற போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளர். இதுதொடர்பாக கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தரப்பில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்திய 3 போலீசார் மீதும் குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.