வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு படம் வெற்றியடைய இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கும் படத்தில் இளையராஜா- யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். வெங்கட் பிரபுக்கு 11வது படமானாலும் இது அவருக்கு முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாக சைதன்யாவின் 22வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு எடிட்டிங். தெலுங்கு மற்றும் தமிழில் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெலுங்கில் வாழ்த்துக்கூறி விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதில் கூறியதாவது:
என்னுடைய மற்றும் உன்னுடைய அப்பாவின் செல்வாக்கும் இல்லாமல் உன்னுடைய சொந்த உழைப்பின் மூலமாக கிடைத்த வெற்றியின் மூலம் முதன் முதலில் தெலுங்கு படம் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் பூஜைக்கு வரமுடியாததற்கு எனக்கு மிகவும் வருத்தம். இருந்தாலும் என்னுடைய ஆசி எப்போதும் இருக்கும். உன்னுடைய வெற்றிப் படத்தில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி. படத்தின் கம்போசிங் முடிவடைந்து விட்டது. படம் வெற்றியடைய வாழ்த்துகள். கடவுள் உனக்கு ஆசி புரியட்டும்.
All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
â Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை திரும்பியதும் நள்ளிரவில் மு.க. ஸ்டாலினுடன் உதயநிதி சந்திப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் 2026 செய்திகள் - நேரலை

இன்றைய ராசி பலன்கள் (05.08.2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மகிழ்ச்சி!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



