
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன.
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
இதையும் படிக்க | லோகேஷுக்கு முன்பே விக்ரம் 2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தாரா வெங்கட் பிரபு?
இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக் குழுவினரை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக மாமனிதன் படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Thanku so much @rajinikanth sir for praising #mamanithan family entertainer . pic.twitter.com/3zQp6sN4Mi
— RK SURESH (@studio9_suresh) June 25, 2022