
கமல் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் வெளியான இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் தொடர்பான பேட்டிகளில் கமல் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனியாக வெளியிடுவேன் என்று லோகேஷ் சொல்லியிருந்தார். தற்போது அந்த விடியோ ப்ரமோவை வெளியிட்ட அவர், நாளை (ஜுன் 27) முழு விடியோவும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகர் 'பூ' ராமு காலமானார்
இந்த விடியோ கமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். விக்ரம் படத்தில் சண்டைக்காட்சிகளில் கமல் கலக்கியிருந்தார். அனிருத்தின் இசை அதற்கு பக்கபலமாக அமைந்திருந்தது. விக்ரம் அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் இப்பொழுதே காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் இறுதிகாட்சி ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
The full video will be out tomorrow @ikamalhaasan #vikram #Vikram25Days pic.twitter.com/r1YABn9RSt
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 27, 2022