
வெற்றித் திரைப்படங்களுக்கு இப்போதெல்லாம் ஒரேஒரு நாயகி மட்டும் இடம்பெற்றால் ஆகாதென நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் திரைத் துறையினர்.
ஆமாம், ஹிந்தியில் சல்மான் கான் நடித்து வெளியான நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சல்மான் கானுக்கு இணையாக நடிப்பவர் சமந்தா!
இதனிடையே, தமன்னாவையும் ராஷ்மிகா மந்தனாவையும் நடிக்க வைப்பதற்காகப் பேசப்படுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ஹிந்தி ரீமேக் படத்தில் நாயகனாகும் அர்ஜூன் தாஸ்
இவர்களுடன் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கேனும் பூஜா ஹெக்டே நடனமாடினால்... புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஒரே ஒரு பாட்டு, ரசிகர்களைப் படுத்திய பாடு தெரியும்தானே... பூஜா ஹெக்டேவுடனும் பேச்சு நடந்துவருகிறதாம்.
நான்கு நாயகிகளுடன் ஜூலையில் படப்பிடிப்புத் தொடங்கப் போகிறது, நோ என்ட்ரி -2! தமிழிலும் வருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.