
அட்லி இயக்கும் ஜவான் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் ஷாருக்கான் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் அப்பா ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக வருகிறாராம்.
இதையும் படிக்க | அருமை தம்பி சூர்யா - கமல்ஹாசன் பாராட்டு
பொதுவாக அட்லி படங்களின் கதை முன்பு வெளியான தமிழ் படங்களின் சாயலில் இருக்கும். அந்த வகையில் இந்தப் படம் நடிகர் விஜய்யின் வில்லு பட சாயலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜவான் திரைப்படம் வருகிற அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
villu da ithu. pic.twitter.com/NROPFYjjLl
— aspecificarea_bat | NV stan account. (@thatvavvalu) June 29, 2022